×

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு ரூ500 கொடுங்க! – ம.பி பாஜக அமைச்சர் ‘பலே’ வேண்டுகோள்

போபால்: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பாஜகவை சேர்ந்த மாநில கலாசார துறை அமைச்சர் உஷா தாக்கூர் போபாலில் நிருபர்களிடம் கூறுகையில், ‘தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களாக ஆகிவிட்டனர். அதனால், அவர்கள் பிரதமர் அறக்கட்டளை நிதிக்கு (பிஎம் கேர்ஸ்) தலா 500 ரூபாயை நன்கொடையாக செலுத்தலாம். உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், ஒவ்வொரு நபரும் போட்டுக் கொண்ட ஒரு டோஸ் விலை 250 ரூபாய் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு டோஸ் தடுப்பூசி விலை 500 ரூபாய் என்பதும் தெரியும். அதனால், இரண்டு டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு ரூ. 500 செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்’ என்றார். பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களுக்கு பின்னர், ‘மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், அமைச்சர் உஷா தாக்கூர், மக்களிடம் பிஎம் கேர்ஸ் நிதியில் ரூ. 500 செலுத்த வேண்டும் என்று கூறியதை பலரும் விமர்சித்துள்ளனர். மொத்த தடுப்பூசி உற்பத்தியில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத தடுப்பூசியை வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகாவின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்ய தயாரித்த ஸ்புட்னிக்- 5 ஆகியன தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது….

The post தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ‘பிஎம் கேர்ஸ்’ நிதிக்கு ரூ500 கொடுங்க! – ம.பி பாஜக அமைச்சர் ‘பலே’ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : PM ,BJP ,Minister ,Bale ,Bhopal ,Madhya Pradesh BJP ,Pale ,Dinakaran ,
× RELATED முஸ்லிம்களுக்கு பாஜ ஆட்சியில் சலுகை: பிரதமர் மோடி பிரசாரம்